16ஆவது உலகத்தமிழ் ஆசிரியர் மாநாட்டின் அழைப்பிதழை NUTP தலைவரிடம் வழங்கிய KKGSTM தலைவர் அர்ஜூனன்

மொழி ஓர் சமூகத்தின் அடையாளம். எப்பொழுது ஒரு மொழி அழிய ஆரம்பிக்கிறதோ தானாகவே அந்த இனம் அழிவை நோக்கி செல்லும். மலேசிய திருநாட்டில் நமது தாய் மொழியான தமிழ் மொழியை போற்றி பாதுக்காக்க பல பாடுபட்டு வருகின்றனர் என்பதனை யாரும் மறுக்க இயலாது. அந்த வகையில் 16ஆவது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு விமரிசையாக நடைபெறவிருப்பதாக மலேசிய தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் முருகையா தெரிவித்தார். இன்று தேசிய NUTP தலைவர் ஹாஜு அமினுடின் அவாங்,  செயலாளர் ஹாஜு ஃபவ்சி சிங்கோன் ஆகியோருக்கு மாலை, பொன்னாடை அணிவித்து மாநாடு தொடர்பான அழைப்பிதழை அர்ஜுனன் தலைமையிலான குழுவினர் வழங்கினர்.

16ஆவது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டை நடத்தும் பெருமைமிக்க வாய்ப்பு இம்முறை மலேசியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மாநாடு எதிர் வரும் டிசம்பர் மாதம் 4,5 மற்றும் 6 தேதிகளில் கோலாலம்புரில் உள்ள இராமா தங்குவிடுதில் நடைபெறும்.இம்மாநாட்டில் மலேசியா,சிங்கப்பூர்,இந்தியா, இலங்கை, மொரீசியசு,கனடா, போன்ற நாடுகள் கலந்துக்கொள்வார்கள் என்று மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கத்தின் தலைவரும் இம்மாநாட்டின் இணைத் தலைவருமாகிய உயர்திரு அர்ஜுனன் முருகையா விளக்கினார்.

இந்த மாநாட்டை மலாயா தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கத்தின் (KKGSTM) முதன்மை ஏற்பாட்டில், தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத்தின் (NUTP) கூட்டணி ஆதரவுடன் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் இணை ஆதரவாக மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகமும் சேர்ந்து முழு ஆதரவை வழங்குகிறார்கள்.தமிழ் ஆசிரியர்களின் நலன் மற்றும் அவர்களின் தொழில்முறை வளர்ச்சியை உறுதி செய்வதில் எங்களின் கூட்டுமுயற்சி ஒரு சிறந்த சான்றாகும்.” என தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத்தின் (NUTP) தேசிய உதவித் தலைவர் ஈஸ்வரன் செல்வதுரை கூறினார்.

தற்போது உலகம் டிஜிட்டல் மையமாகி வரும் சூழலில், இந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமானது. இது வெறும் தமிழ் ஆசிரியர்களுக்கானது மட்டுமல்லாமல், உலகளாவிய கல்விச் சமூகத்திற்கே ஒரு முன் மாதிரியாக அமையும். வகுப்பறைகளில் நவீன தொழில்நுட்பத்தையும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவையும் எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பதில் இம்மாநாடு கவனம் செலுத்துகிறது என மலாயா தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர்  அர்ஜுனன் முருகையா கூறினார்.

மலேசியா உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டை நடத்துவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னதாக 1994ஆம் ஆண்டு 2ஆவது மாநாட்டையும் 2006ஆம் ஆண்டு 7-வது மாநாட்டையும் 2013ஆம்  10ஆவது மாநாட்டையும் வெற்றிக்கரமாக நடத்தியிருக்கும் வேளையில் தற்பொழுது டிசம்பர் 4,5,6ஆம் தேதிகளில் 16ஆவது மாநாடு வெற்றிகரமாக நடைபெறவிருக்கிறது. இது தமிழ் மொழி கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்துவதில் மலேசியாவிற்கு இருக்கும் அர்ப்பணிப்பையும் தகுதியையும் காட்டுகிறது என இம்மாநாட்டின் இணைத் தலைவருமாக ஈஸ்வரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here