கோலாலம்பூர்:
ஜின்ஜாங் காவல் நிலையத்தின் சுவரில் தோயோத்தா வியோஸ் கார் மோதியதில், ஓட்டுநர் காயமடைந்தார்.
நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், 38 வயதான ஆடவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது என்று, கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) தலைவர் துணை ஆணையர் முகமட் ஜம்சூரி முகமட் இசா கூறினார்.

“38 வயதான குறித்த ஓட்டுநர் தனது வாகனத்தை கட்டுப்படுத்தத் தவறியதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்றும், தலையில் காயமடைந்த அவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவர் சொன்னார்.
“பாதிக்கப்பட்டவரிடமிருந்து முழுமையான அறிக்கையைப் பெற காவல்துறையின் விசாரணை அதிகாரிகள் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர் என்றும், அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43 (1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.




















