மலேசியாவில் 50 லட்சம் பேருக்குச் சிறுநீரகப் பாதிப்பு: 95% பேருக்குத் தங்களுக்குப் பாதிப்பு இருப்பதே தெரியாது!

ஷா ஆலாம், ஏப்ரல் 12:

மலேசியாவில் சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் நாள்பட்ட சிறுநீரக நோயினால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிர்ச்சியூட்டும் விதமாக அவர்களில் 5 விழுக்காட்டினருக்கு மட்டுமே அந்தப் பாதிப்பு இருப்பது தெரியும் என்றும் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜுல்கிஃப்லி அஹ்மாட் கவலை தெரிவித்துள்ளார்.

 

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த முக்கியத் தகவல்கள்:

பொருளாதாரச் சுமை: சிறுநீரகச் செயலிழப்பு சிகிச்சைக்காக மலேசிய அரசு ஆண்டுதோறும் சுமார் 3.3 பில்லியன் ரிங்கிட் செலவிடுகிறது.

 

இதற்கு சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே சிறுநீரகப் பாதிப்புக்கும் முதன்மைக் காரணியாக உள்ளது.

சர்க்கரை கலந்த பானங்களுக்கான வரியை உயர்த்துவதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு, நோயாளிகளுக்குத் தேவையான நவீன மருந்துகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

நோயாளிகள் மருத்துவமனைக்கு அலைவதைக் குறைத்து, வீட்டிலேயே டயாலிசிஸ் செய்துகொள்ளும் ‘Peritoneal Dialysis (PD)-First’ முறையை அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here