பாசீர் மாஸ், கடந்த ஆண்டு ஒருவரைக் பலவந்தமாகக் கடத்த சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, வேலையில்லாத ஒருவர் அமர்வு நீதிமன்றத்தில் தான் குற்றமற்றவர் என கூறி விசாரணைக் கோரினார். குற்றம் சாட்டப்பட்டவரான 42 வயதான முகமது ஹேரி அப்துல் ரஹ்மான், நீதிபதி சுல்க்ப்ளி அப்துல்லா முன்னிலையில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
குற்றச்சாட்டின்படி, பாதிக்கப்பட்டவரை இரகசியமாகவும் சட்டவிரோதமாகவும் சிறைவைக்கும் நோக்கத்துடன், 45 வயதான மர்சுகி முஸ்தபாவை வலுக்கட்டாயமாகக் கடத்துவதற்கு 51 வயதான சிக் ஹிசம்முதீன் ஹசனுடன் சேர்ந்து சதி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்செயல், கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், தும்பாட், கம்போங் பாலோவில் உள்ள ஒரு வீட்டில் பிற்பகல் 2.30 மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.









