மலேசியாவில் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை

கோலாலம்பூர்:

லேசியாவில் கால்நடை மருத்துவத் துறையில் மருத்துவர்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதாக கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் ஜெனரல் டாக்டர் முகமட் நூர் ஹிஷாம் முகமட் ஹரோன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது சுமார் 2,600 கால்நடை மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

சர்வதேச தரத்தின்படி, மலேசியாவிற்கு குறைந்தது 8,500 மருத்துவர்கள் தேவை. இதனடிப்படையில் சுமார் 5,900-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

சர்வதேச அளவில் 5,000 பேருக்கு ஒரு கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால் மலேசியாவில் 13,700 பேருக்கு ஒருவர் மட்டுமே உள்ளார்.

கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு காரணமாக வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது அதிகரித்துள்ளது (மலேசியாவில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் செல்லப்பிராணிகள் உள்ளன).

இறைச்சி மற்றும் பால் உற்பத்தித் துறையில் சர்வதேச தரக்கட்டுப்பாடுகளைப் பின்பற்ற அதிக மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்.

அரசுத் துறையை விட தனியார் கிளினிக்குகளில் அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் கிடைப்பதால், பட்டதாரிகள் அங்கு செல்ல விரும்புகின்றனர்.

மலேசியாவின் முக்கியப் பல்கலைக்கழகங்களான UPM மற்றும் UMK ஆகியவை ஆண்டுக்கு 180 முதல் 220 பட்டதாரிகளை மட்டுமே உருவாக்குகின்றன. இது நாட்டின் தேவைக்கு மிகக் குறைவு.

எனவே இதற்கு தீர்வாக அரசுத் துறையை மேம்படுத்துவதோடு, கூடுதல் கல்வி நிறுவனங்கள் கால்நடை மருத்துவப் படிப்புகளை வழங்க முன்வர வேண்டும் என்று டாக்டர் முகமது நூர் ஹிஷாம் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் MSU பல்கலைக்கழகம் இந்தப் படிப்பைத் தொடங்கியுள்ளதை அவர் வரவேற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here