ஜோகூர் பாரு:
பொதுமக்கள் இடங்களில் புகைபிடித்தல் தொடர்பான விதிமீறல்களை தடுக்கும் நோக்கில் ஜோகூர் சுகாதாரத் துறை சிறப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
மாநில சுகாதார இயக்குநர் தெரிவித்ததாவது, சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்தச் சோதனைகள் உணவகங்கள், பொது இடங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளை மையமாகக் கொண்டு நடைபெறும்.
விதிமீறுபவர்களுக்கு RM250 வரை அபராதம் விதிக்கப்படும். காலவரையளிக்குள் செலுத்தத் தவறினால் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
“பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக புகைபிடித்தல் தடையை கடுமையாக அமல்படுத்துகிறோம். அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
சுகாதார துறை, புகைபிடித்தல் தடைப்பட்ட இடங்களில் விதிமீறல்களைப் பொதுமக்கள் புகாரளிக்கவும் ஊக்குவித்துள்ளது.




















