ஜார்ஜ் டவுன்: பினாங்கு, தஞ்சோங் டோகோங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து நேற்று தவறி விழுந்ததில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். திமூர் லாட் காவல் நிலையத் தலைவர் அப்துல் ரோசாக் முஹம்மது ஒரு அறிக்கையில், நேற்று மாலை 6.45 மணிக்கு பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், அந்தச் சிறுமி 16ஆவது மாடியில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து தவறி விழுந்ததாகத் தெரியவந்துள்ளது. மாலை 5.49 மணிக்கு எட்டாவது மாடியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையிலும், பாதிக்கப்பட்டவரின் உடலை ஆய்வு செய்ததிலும், இதில் எந்தவிதமான குற்றச் செயலுக்கான அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை.
பிரேதப் பரிசோதனைக்காக உடல் பினாங்கு மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று ரோசாக் கூறினார். மேலும் விசாரணைகள் தொடர்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.










