சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே, தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.ஜிவி பிரகாஷ். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்த கென் கருணாஸ் இயக்கி நடித்த ‘யூத்’ படத்தின் பாடல்கள் வைரலானது.
‘ஜோ’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் கிரிக்கெட் வீரராக நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜிவி பிரகாஷ் குமார், “நான் எந்த விளம்பரங்களுக்கும் ஆதரவு தரமாட்டேன். சூதாட்டம் மற்றும் மதுபானம் தொடர்பானவற்றையும் புரமோஷன் செய்ய மாட்டேன். குளிர் பானங்களுக்கான விளம்பரங்களில் நடிக்க கோடிக்கணக்கில் கொடுக்க முன்வந்தும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார்.




















