Simpan SSPN: பிள்ளைகளின் கல்வி முதலீடு உத்தரவாதம் மிக்கது

தேசிய உயர்கல்வி நிதி கழகத்தின் (PTPTN) தேசிய கல்விச் சேமிப்புத் திட்டம் (Simpan SSPN) உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தைக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு விடிவெள்ளியாகத் திகழ்கிறது: உத்தரவாதம் மிக்கது. பிள்ளைகளின் நிதித் தேவையைத் திட்டமிடுவதில் பெற்றோருக்கு ஒரு நம்பிக்கைக் கதிராகத் திகழ்கிறது. இன்றைய பொருளாதாரச் சூழலில், அதிகரித்து வரும் கல்விச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் பல பெற்றோர் கவலையிலும் இடையூறையும் எதிர்கொள்கின்றனர்.

கல்வி எதிர்காலத்திற்கான முதலீடு & சிறப்பம்சங்கள்

Simpan SSPN என்பது பல்வேறு சிறப்பம்சங்களையும் நன்மைகளையும் வழங்கும் ஒரு சேமிப்பு முதலீடாகும். அவற்றில் ஆண்டுக்கு 8,000 ரிங்கிட் வரை வருமான வரி விலக்கு, வைப்பீட்டாளர்களுக்கு இலவச தக்காஃபுல் (Takaful) காப்புறுதி பாதுகாப்பு, தகுதியுள்ள ஒரு குடும்பத்திற்கு 10,000 வரை இலவச ஊக்க மானியம் (Geran Sepadan), போட்டித்தன்மை வாய்ந்த லாப ஈவு, அரசாங்கத்தின் உத்தரவாதம் உள்ள சேமிப்பு, மற்றும் ஷரியா விதிமுறைகளுக்கு உட்பட்டது ஆகியன அடங்கும். Simpan SSPN வழங்கும் நன்மைகள், சலுகைகள், அனுகூலங்கள் குறித்து இரண்டு ஆசிரியர்கள், ஒரு தாதி ஆகியோரின் அனுபவங்களின் பகிர்வுகளை கீழே பார்ப்போம்.

எஸ். ஷாலினி (ஆசிரியர்)

கம்பாரைச் சேர்ந்த 31 வயது ஷாலினி சோமசுந்தரம், கம்பார் தேசிய இடைநிலை பள்ளியில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் மற்றும் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தில் (UPSI) ஆண்டுகள் கல்வி பயின்ற இவர், கல்விக்கான நிதியைத் திரட்டுவதில் தாம் எதிர்கொண்ட சிரமங்களைச் சொந்த பிள்ளை அனுபவிக்கக்கூடாது என்று நினைக்கிறார்.

எனவே, தற்போது 2 வயதாகும் தனது மகள் இனியாலுக்காக Simpan SSPN கணக்கில் ஒவ்வொரு மாதமும் சேமிக்க அவர் உறுதி பூண்டுள்ளார். சக ஆசிரியர் ஷாமளா தான் இந்தச் சேமிப்பைத் தொடங்க முக்கிய தூண்டுதலாக இருந்ததாக ஷாலினி குறிப்பிட்டார். அவர் எவ்வித கல்விக்கடனும் பெறாமல் Simpan SSPN சேமிப்பைக் கொண்டே பல்கலைக்கழகப் படிப்பை முடித்துள்ளார்.

இந்த வெற்றியால் ஈர்க்கப்பட்ட ஷாலினி, தற்போது தனது மகளுக்காக மாதம் 150 ரிங்கிட்டை சேமித்து வருகிறார். தனது கணவர் பார்த்திபன் செல்வராஜா, மகளின் கணக்கில் கூடுதலாக 2,500 ரிங்கிட்டை வைப்புத் தொகையாக செலுத்தியதுடன் தொடர்ந்து சேமிப்பதற்கும் முழு ஆதரவு அளித்து வருகிறார் என்றார்.

Simpan SSPN போட்டித்தன்மை வாய்ந்த லாப ஈவு, அரசாங்க உத்தரவாதம், தக்காஃபுல் பாதுகாப்பு காப்புறுதி ஆகியவற்றை வழங்குகிறது என்பதை ஷாலினி சுட்டிக்காட்டினார். “எனது மகளின் கல்வி எதிர்காலம் பாதுகாப்பானது, உத்தரவாதம் பெற்றது. அவள் பல்கலைக்கழகத்தில் நுழையும் போது, கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது” என்று ஷாலினி கூறினார். Cabutan WOW! Simpan SSPN 2025 குலுக்கலில் தங்கப் பிரிவில் (Simpan SSPN Gold Category) பெற்ற 1,000 ரிங்கிட் பணத்தை அப்படியே மகளின் சேமிப்புக் கணக்கில் சேர்த்துள்ளார். இந்திய சமுதாயப் பெற்றோர் அனைவரும் தங்கள் பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்திற்காக Simpan SSPN கணக்கைத் தொடங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பிரகாஷ் நடேசன் (ஆசிரியர்)

கூலிம் சியோமின் தேசிய இடைநிலை பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றுபவர் பிரகாஷ் நடேசன் (வயது 56). இவருக்கு பி. தரணிதரன் (வயது 28), பி. சுவிவர்மன் (வயது 28), பி. தனேஸ்வரன் (வயது 19) என மூன்று மகன்கள் உள்ளனர். தரணிதரன் தற்போது ஒரு பொறியாளராக உள்ளார். மென்பொருள் பொறியியலில் முதல் வகுப்புத் தேர்ச்சி பெற்ற சுவிவர்மன், தற்போது மலேசிய ஏர்லைன்ஸ் (MAS) நிறுவனத்தில் விமானியாகப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது இளைய மகன் தனேஸ்வரன் தற்போதுதான் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் தனது படிப்பைத் தொடங்கியுள்ளார்.

வலுவான நிதி அடித்தளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரகாஷ், கோவிட்-19 பெருந்தொற்று காலமான 2022 ஏப்ரல் முதல் Simpan SSPN-இல் சேமிக்கத் தொடங்கினார். Simpan SSPN சேமிப்புப் பண்பின் மூலம் நிதித் திட்டமிடலை வகுப்பதற்கு வழிவகுக்கிறது. இது பிள்ளைகள் கடன் சுமையின்றி வாழ்க்கையைத் தொடங்க உதவுவதோடு, பெற்றோர் வரி விலக்கு நன்மைகளையும் பெற வகைசெய்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியச் சமுதாயத்தினர் பிள்ளைகளின் கனவுகளை நனவாக்க Simpan SSPN-இல் நம்பிக்கையுடன் சேமிக்க வேண்டும் என்று பிரகாஷ் விருப்பம் தெரிவித்தார். பிள்ளைகளின் உயர்கல்வி லட்சியங்கள் நிதி சுமையால் தடைபட்டுவிடக்கூடாது, இதற்கு தான் Simpan SSPN மிகச் சிறந்த நிதி கட்டமைப்பை வகுத்துத் தந்திருக்கிறது என்று அவர் கூறினார்.

ஆர். உஷா (தாதி)

ஜோகூர் பாருவைச் சேர்ந்த உஷா ராமன் (வயது 36), 2013 முதல் சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றி வருகிறார். இவர் முன்பு ஓர் உள்ளூர் தனியார் பல்கலைக்கழகத்தில் தாதிமை துறையில் டிப்ளோமா படிப்பை முடிக்க PTPTN கடன் பெற்றிருந்தார். அந்தச் சமயத்தில் Simpan SSPN பற்றி அவரது பெற்றோருக்குத் தெரிந்திருக்கவில்லை. தற்போது கணவர் டேனிஷ் மனோகரனின் ஆதரவுடன் உஷா இத்துறையில் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.

தான் எதிர்நோக்கிய சிரமங்களை தன் இரு மகள்களும் அனுபவிக்கக் கூடாது என்று நினைத்தார். அதன் எதிரொலியே ரக்ஷித்தா (வயது 11), சோமித்ரா (வயது 6) ஆகிய தனது இரு மகள்களுக்காகவும் அவர் Simpan SSPN கணக்கைத் தொடங்கியுள்ளார். ரக்ஷித்தாவுக்கு மாதக் குழந்தையாக இருந்தபோதே சேமிக்கத் தொடங்கிய இவர், சோமித்ராவுக்கு ஒரு வயதிலிருந்து சேமிக்கத் தொடங்கினார். தனது பிள்ளைகள் எவ்வித நிதிச் சுமையுமின்றி பல்கலைக்கழகத்தில் கால்பதிக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக மகிழ்ச்சியுடன் உஷா தெரிவித்தார். Simpan SSPN-ஐ பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்திற்கு நீண்டகால அடிப்படையில் ஒளிமயமான நம்பிக்கையைத் தரும் ஒரு முதலீடாக கருதுமாறு இந்தியச் சமுதாயத்திற்கு உஷா அறிவுறுத்தினார்.

அதிகாரப்பூர்வ வலைப்பக்கம்: www.ptptn.gov.my அல்லது myPTPTN செயலி மூலம் விவரங்களைப் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here