பினாங்கு மாநிலத்தில் உள்ள பெர்மிம் இணைப்புச் சங்கங்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு

பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த பெர்மிம் அமைப்பின் இணைப்புச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன், பெர்மிமின் புதிய நிர்வாகக் குழுவினரின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் அமர்வு சமீபத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. முதல் நாளில் லீகா முஸ்லிம் அமைப்பின் இணைப்புச் சங்கங்களுடனும், அதனைத் தொடர்ந்து காப்பிம் என்று அழைக்கக்கூடிய பினாங்கு மாநில இந்திய முஸ்லிம் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த இணைப்புச் சங்கங்களுடனும் சந்திப்பு நடைபெற்றது. பின்னர் சென்ட்ரல் முஸ்லிம் சொசைட்டி அமைப்பின் இணைப்புச் சங்கங்களுடனும், இறுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க கபித்தான் பள்ளிவாசல் நிர்வாகக் குழுவினருடனும் கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றது.

தனித்தனியாக நடைபெற்ற இந்த சந்திப்பு சிறப்பான வரவேற்புடனும், உற்சாகமான பங்கேற்புடனும் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு இணை அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு, தங்களது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினர் என பெர்மிம் தலைவர் முஹம்மது அஸ்மான் ஷாஹ் தெரிவித்தார்.

 

இந்த கலந்துரையாடல் அமர்வு, சமூக அமைப்புகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றியதாக அவர் கூறினார். பங்கேற்பாளர்கள் தங்களது அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை மனமுவந்து பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறந்த யோசனைகள் மற்றும் பயனுள்ள பரிந்துரைகளை வழங்கிய அனைவருக்கும் உயர்ந்த பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. அந்த கருத்துகள், எதிர்கால செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கான முக்கிய ஆதாரமாக அமையும் எனவும் குறிப்பிடப்பட்டது. எதிர்காலத்தில் உள்ள குறைகளைச் சரி செய்து, கூட்டுப் பணிகளை மேலும் வலுப்படுத்தி, சமூகத்தின் நலனுக்காக வெற்றிப் பாதையில் தொடர்ந்துப் பயணிக்கப்படும் என்றும், அனைவரின் ஒத்துழைப்புடனும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் பெர்மிம் தலைவர் அஸ்மான் ஷாஹ் உறுதியளித்தார். இறுதியில் லீகா முஸ்லிம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பிலும் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here