ஈரான் பூமியிலிருந்து துடைத்தெறியப்படும்: டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இரு நாடுகள் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-

அமெரிக்காவின் சுதந்திர திட்டம் தொடங்கிய பிறகு தென் கொரிய சரக்கு கப்பல் உட்பட தொடர்பில்லாத சில நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

இதனால், இந்த திட்டத்தில் தென்கொரியா இணைவதற்கான நேரம் இதுவாக இருக்கலாம். ஹோர்முஸ் நீரிணையில் தவிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளித்து செல்லும் அமெரிக்க கப்பல்களை ஈரான் தாக்கினால், அந்த நாடு பூமியின் முகத்திலிருந்தே துடைத்தெறியப்படும்.

அமெரிக்க படைகள் ஈரானின் 7 சிறிய படகுகளை சுட்டு வீழ்த்தியுள்ளன. தென்கொரிய கப்பலை தவிர ஜலசந்தி வழியாக செல்லும் எந்த கப்பலுக்கும் சேதம் ஏற்படவில்லை என டிரம்ப் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here