இமாசல பிரதேசத்தில் கனமழை; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

சிம்லா இமாசல பிரதேசத்தில் கனமழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 அக உயர்ந்து உள்ளது.

இமாசல பிரதேசத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி மாநில அவசரகால செயல்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, கனமழை பாதிப்புகளால், பலியானவர்களின் எண்ணிக்கை 14 அக உயர்ந்து உள்ளது.

ரூ.15.27 கோடி

இவற்றில் ஜூன் 30 வரையில் வானிலை தொடர்பான சம்பவங்களால் 12 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் வானிலை தொடர்பான சாலை விபத்துகளில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர் என அரசு அறிக்கை தெரிவிக்கின்றது. பொது மற்றும் தனியார் சொத்துகளின் மொத்த பாதிப்பு ரூ.15.27 கோடி என்ற அளவில் உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

மீட்பு நடவடிக்கை

கனமழை தொடர்ச்சியாக சாலை இணைப்பு, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அத்தியாவசிய சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவற்றை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும், மீட்பு நடவடிக்கைகளிலும் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here