ஜித்ரா, அக்டோபர் 8 :
கெடா மாநிலத்தில் திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளை நடத்த இனி அனுமதி வழங்கபடாது என்று கெடா அரசு முடிவு செய்துள்ளதாக அதன் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரம், இளைஞர் மற்றும் விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுக் குழுவின் தலைவர் முகமட் ஃபிர்தௌஸ் அகமட் தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தின் போது கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசிமுஹமட் நோருடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நிலையான இயக்க முறைமை (SOP) தெரியும், கோரப்பட்ட விண்ணப்பம் துல்லியமாகவும் SOP உடன் இணக்கமாகவும் இருந்தால், நிகழ்சி நிரலை இயக்க அனுமதி வழங்கப்படும்.
முஹம்மது சனுசி முன்பு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கெடாவில் ஒழுக்கக்கேடான நடத்தையை ஊக்குவிக்கும் எந்தவொரு இசை நிகழ்ச்சியும் அனுமதிக்கப்படாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.







