சுங்கை பட்டாணியில் கோர விபத்து: பிஞ்சுப் குழந்தை உட்பட 6 பேர் பரிதாப பலி!

சுங்கை பட்டாணி:

சுங்கை பட்டாணி (Sungai Petani) பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் நேரிட்ட மிகக் கோரமான சாலை விபத்து ஒன்றில், ஒரு பச்சிளம் குழந்தை உட்பட மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று மதியம் நிகழ்ந்த இந்த அதிர்ச்சி விபத்து குறித்து மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு (JBPM) அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர்.

விபத்தின் வீரியம் காரணமாக, காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரு பிஞ்சுக் குழந்தை உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே தங்களின் இன்னுயிரைத் துறந்துள்ளதாகத் தீயணைப்புத் துறையினர் மிகவும் கனத்த இதயத்துடன் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்து நடந்த பகுதிக்குத் தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து, இடிபாடுகளுக்குள் சிக்கிய உடல்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விபத்தில் சிக்கியவர்கள் யார், அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா மற்றும் விபத்து எதனால் ஏற்பட்டது என்பது போன்ற முழுமையான விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இக்கோர விபத்து குறித்து சுங்கை பட்டாணி போலீசார் மேல்விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஞாயிறு விடுமுறை நாளில் நிகழ்ந்த இந்த கோரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here