சோமாலியாவில் 23 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே அவர்களை ஒழிப்பதற்கு ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வளைகுடா பகுதியான புலா-புலே அருகே ரோந்து சென்றபோது பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து ராணுவத்தினர் அங்கு சுற்றி வளைத்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அல்-ஷபாப் அமைப்பை சேர்ந்த 23 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். அதன்பிறகு வெடிகுண்டு, கைத்துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு அவர்களது முகாம்களை அழித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here