பாலோ மக்கள் இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் அசுத்தமான நீரை குடிப்பது? – பாலோ சட்டமன்ற உறுப்பினர் ஏன் அலட்சியம்!

தாமான் கோத்தா பாலோ (Taman Kota Paloh) சுற்று வட்டாரத்திலுள்ள வசிக்கும் பொதுமக்களுக்கு இன்றுவரை அசுத்தமான, குடிநீர், குடிக்க முடியாமல் கஷ்டத்தை எதிர்கொண்டு வருவதால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் கவலையுடம் இருப்பதாக டாக்டர் சஸ்வின் கூறினர். ​ பாலோ மக்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் இந்தக் துயரத்தை அனுபவிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் தங்களின் வீடுகளில் குடிநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை (Water Filter) பொருத்திக் கொள்கின்றன. ஆனால், (B40) பிரிவினரின், ஏழைக் குடும்பங்களின் நிலை என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்கள் அன்றாடத் தேவைகளுக்காக குடிநீர் கைமுறையாக வடிகட்டி, கொதிக்க வைக்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ளன என அவர் தெரிவித்தார். சில நேரங்களில் தங்களின் அன்றாடப் வேலைப் பிழைப்பிற்காக அசுத்தமான, சுகாதாரமற்ற நீரைப் பயன்படுத்தவேண்டிய கட்டாயமாக தாங்கள் தள்ளப்படுவதாக என ஜொகூர் மாநிலத்தின் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் செயற்குழுத் தலைவருமாகிய அவர் சொன்னார்.

 

மக்களுக்கு இழைக்கப்படும் இந்த துயரம் நியாயமானதா?
​இதைவிட ஏமாற்றமளிக்கும் விஷயமாக கருதப்படுகிறது. இதுவொன்றும் புதிதல்ல. இந்த குடிநீர் பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வந்தபோதிலும், இதுவரை முறையான, நிரந்தரத் தீர்வுகள் பாலோ சட்டமன்ற உறுப்பினரிடம் எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி என்ற முறையில், பாலோ சட்டமன்ற உறுப்பினர் (ADUN Paloh) இதுவரை என்ன உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளாரா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது? நீர் என்பது மக்களின் நலன், ஆரோக்கியம் சார்ந்த அடிப்படையான ஒன்று. இதை அரசியலாக்கவோ அல்லது அலட்சியப்படுத்தவோ கூடாது என டாக்டர் சஸ்வின் கேட்டுக் கொண்டார்.

​ஜொகூர் மாநிலத்திற்குள் பில்லியன் கணக்கிலான ரிங்கிட் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது, ஆனால், தொகுதியில் உள்ள வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க அடிப்படைப் பிரச்சனையைக் கூட மாநில அரசாங்கத்தால் தீர்வுக்காண முடியவில்லை என்றால், அது ஒரு சிரிப்பாக உள்ளது. அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, தாம் தனிப்பட்ட முறையில் ரான்ஹில் எஸ்ஏஜே (Ranhill SAJ) நிறுவனத்திடம் புகார் தந்துள்ளேன். மிக விரைவில், இப்பிரச்சனைக்கான தீர்வு, காரணத்தைக் கண்டறியப்படும், உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்க வலியுத்தியுள்ளதாகவும், எஸ்ஏஜேவின் உயர்மட்ட நிர்வாகத்தைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் சொன்னார்.

​ சுத்தமான, பாதுகாப்பான, தரமான நீர் விநியோகத்தைப் பெற பாலோ மக்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும். இது ஒரு ஆடம்பரமோ அல்லது சலுகையோ அல்ல, மாறாக ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். தாம், ஜொகூர் மாநில எம்ஐபிபி (MIPP) குழுவுடன் இணைந்து, இப்பிரச்சனையைத் தொடர்ந்து கவனிக்கிறேன். இதற்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை தாம் போராடுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

(சண்முகம் செல்வம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here