( ரெ.மாலினி)
மலாக்கா:
ஹாங்காங்கில் அண்மையில் நடைபெற்ற அனைத்துலக யோகா போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துக் கொண்ட மலாக்காவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சிறப்பான வெற்றிப் பெற்று மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் கவுதம் சீனீவாசன் நாயர் மற்றும் சிவன்யா கமலநாதன் ஆவர். இவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் பலனாக இந்த அனைத்துலக அரங்கில் சாதனை படைக்க முடிந்துள்ளது.

இவர்களின் வெற்றியை பாராட்டி, அண்மையில் மலாக்கா தமிழர் சங்கத்தின் 47வது ஆண்டு பொதுக்கூட்ட விழாவில் மாணவர்கள் இருவரும் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் கலந்து கொண்டோர் மாணவர்களின் சாதனையை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இளம் தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் இந்த சாதனை, மலாக்கா மாநில இந்திய சமுதாயத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.





















