புக்கிட் ஜலீலில் 30வது மாடியில் இருந்து சிறுவன் விழுந்து இறந்ததை அடுத்து தாய் மற்றும் மாமா கைது

கோலாலம்பூர்:

நேற்று புக்கிட் ஜலீலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 30வது மாடியில் இருந்து விழுந்து இறந்ததாகக் கூறப்படும் நான்கு வயது சிறுவனின் தாய் மற்றும் மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

25 மற்றும் 27 வயதுடைய இந்தோனேசியர்கள் இருவரும் , 2001 குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1) இன் கீழ் விசாரணைகளில் உதவுவதற்காக இன்று வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செராஸ் காவல்துறைத் தலைவர் ஏசிபி ஐடில் போல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும் சிறுவனின் தந்தை மலேசியர் என்று அவர் கூறினார்.

“பிரேத பரிசோதனையின் அடிப்படையில், குழந்தை விழுந்த பிறகு ஏற்பட்ட பல காயங்களால் இறந்தது. சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்றும் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here