PTPTN: 40,000-க்கும் மேற்பட்ட டிப்ளோமோ மாணவர்களுக்கு முன்பணம் கடன் வழங்குகிறது

தேசிய உயர்கல்வி நிதி கழகம் (PTPTN), உயர்கல்வி அமைச்சு (KPT) கீழ் இயங்கும் ஒரு முகமையாக, தகுதியுள்ள ஒவ்வொரு புதிய மாணவருக்கும் 1,500 ரிங்கிட் முன்பண கடனுதவி (WPP) வழங்குவதன் மூலம் தேசிய உயர்கல்வி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதில் தனது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

அரசாங்க பல்கலைக்கழகங்கள் (UA), பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கான ஆரம்பகட்டத் தயார் நிலை செலவுகளில் ஒரு பகுதியை ஈடுசெய்ய இந்த வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் குடும்பங்கள் மீதான நிதிச் சுமை குறைக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் படிப்பை மிகவும் தயாரான, ஒழுங்கமைக்கப்பட்ட, வசதியான இருப்பினும்தொடங்க முடியும் என்பதை உறுதி செய்வதில் PTPTN கொண்டுள்ள அக்கறையையும் இந்த முயற்சிபிரதிபலிக்கிறது.

UPU ஆன்லைன் அல்லது UA சேர்ப்பு இணையதளம் வழியாக ஒரு பொது உயர் கல்வி நிறுவனத்தில் (IPTA) சேரவிண்ணப்பிக்கும்போது, இந்த WPP-ஐப் பெற தகுதிபெற்ற மலேசிய மாணவர்களுக்கு இந்த உதவிவழங்கப்படுகிறது. மேலும், மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் Sumbangan Tunai Rahmah (STR) பெறுபவர்களாக இருந்து, நிர்ணயிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் இது வழங்கப்படும். 1999-இல் WPP அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2026 ஏப்ரல் 30 வரை, 1.48 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் மொத்தம் 999,838 மாணவர்கள் இந்த நன்மையைப் பெற்றுள்ளனர்.

2026 ஆம் கல்வியாண்டில் UG, டிப்ளமோ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் தங்கள் டிப்ளமோ படிப்பைவெற்றிகரமாகத் தொடரும் 40,099 மாணவர்களுக்கு WPP சலுகை பயனளிக்கும், இதற்காக 60.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் myPTPTN செயலி மூலம் தங்கள் WPP சலுகையைச் சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும் 2026 ஜூலை 10, (வெள்ளிக்கிழமை) முதல் நாடு முழுவதும் உள்ள பேங்க் இஸ்லாம் மலேசியா பெர்ஹாட் (BIMB) முகப்பிடங்களில் WPP சலுகைக் கிடைக்கும்.

மாணவர்களின் அடையாள அட்டை (பிரதிநிதிகளுக்கு அனுமதி இல்லை. கொண்டு வந்து WPP பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த WPP 2026 ஜூலை 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 2026 ஆகஸ்ட் 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இரண்டு (2) மாதங்களுக்குச் செல்லுபடியாகும்.

பினாங்கு தாஜேக் குலோகூரில் PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹீம் WPP தொகையைப் பெறும் மாணவர்களின் வீடுகளுக்கு நேற்று முன்தினம் சென்றார். இந்த வருகையின் போது தகுதியுள்ள மாணவர்களுக்கு WPP சலுகைக் கடிதங்களை வழங்கினார். PTPTN நிறுவன தொடர்பு, சந்தைப்படுத்தல் துறையின் மூத்த தலைமை நிர்வாகி வான் சாவியா வான் அபு பக்கார், PTPTN பினாங்கு மாநில இயக்குநர் முஹம்மது முஃப்தின் பின் அப்துல் ரஹ்மான் ஆகியோர்உடன் இருந்தனர்.

சமூகப் பொருளாதாரப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் உயர்கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதில் PTPTN எப்போதும் உறுதியாக உள்ளது. இந்த PTPTN WPP மானிய முன்னெடுப்பானது UA, பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் புதிய மாணவர்களின் ஆரம்பகட்ட முன்னெடுப்புக்கான செலவுகளில் ஒரு பகுதியை ஈடுசெய்ய உதவும் என PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹீம் தெரிவித்தார்.

மேல் தகவலுக்காக, PTPTN கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், கடன் அதற்கேற்ப செயலாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுவதை உறுதிசெய்ய ஒவ்வொரு UA, பாலிடெக்னிக்கிற்கும் நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பத் தேதியின்படி myPTPTN செயலி வழியாக ஆன்லைனில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். PTPTN கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் myPTPTN செயலி வழியாகத் திறக்கக்கூடிய Simpan SSPN கணக்கைக் கொண்டிருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அவர்கள் முறையே UA, பாலிடெக்னிக்கின் மாணவர் விவகாரப் பிரிவை அணுகலாம் அல்லது நேரடியாக PTPTN-ஐ தொடர்பு கொள்ளலாம். PTPTN WPP, PTPTN கடன்களை தொடர்பான கூடுதல் தகவல்களை, எளிதான, வேகமான, பாதுகாப்பான சேவைகளுக்காக myPTPTN செயலி மூலமாகவும் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here