சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்துள்ள நிலையில் தமிழகத்தின் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். முதல்-அமைச்சர் விஜய் – யின் உத்தரவுபடி தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தயாரிக்கும் பணியை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தலைமையிலான நிதித்துறை மேற்கொண்டு வந்தது
இந்நிலையில், தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.
வெள்ளை அறிக்கை
தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையில் உள்ள விவரம்:-
* தமிழகத்தின் உண்மையான மொத்த கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ளது.
* ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ள தமிழக அரசின் மொத்த கடனளவில் ரூ. 10 லட்சம் கோடி நேரடி கடனாகும். எஞ்சிய ரூ. 3.18 லட்சம் கோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் தொகையாகும்.
* 60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ. 5 லட்சம் கோடி
* கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
* 60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடனை (ரூ. 5 லட்சம் கோடி) விட கடந்த திமுக ஆட்சியில் மட்டும் அதிக கடன் (ரூ. 5 லட்சம் கோடி) வாங்கியுள்ளது.
* தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 934 கடன் உள்ளது.








