காங்கிரஸ் தேசிய இளைஞரணி செயலாளர் ஸ்ரீநிதி தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞரணி செயலாளர் ஸ்ரீநிதி மோகன் நேற்று சந்தித்து அவரது முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்தார். அப்போது தி.மு.க. துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கரூர் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஸ்ரீநிதி மோகன், சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவுக்கு பின்னர், த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here