கோலாலம்பூர்:
மலேசியாவின் 8 மாநிலங்களில் உள்ள சில பகுதிகளில் இன்று மாலை 6.00 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழையும், சூறாவளிக் காற்றும் வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசமான வானிலையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக,கெடா (Kedah): கோத்தா ஸ்டார் (Kota Setar), யான் (Yan), பெண்டாங் (Pendang), கோலா மூடா (Kuala Muda) மற்றும் சிக் (Sik), பேராக் (Perak): மஞ்சோங் (Manjung) மற்றும் பேராக் தெங்கா (Perak Tengah), திராங்கானு (Terengganu): கெமாமான் (Kemaman), பகாங் (Pahang): குவாந்தான் (Kuantan), சிலாங்கூர் (Selangor): உலு லங்காட் (Hulu Langat)., நெகிரி செம்பிலான் (Negeri Sembilan): ஜெலுபு (Jelebu) மற்றும் சிரம்பான் (Seremban), சரவாக் (Sarawak): சரேகெய் பிரிவில் உள்ள சிபு (Sibu) மற்றும் முக்கா பிரிவில் உள்ள தஞ்சோங் மனிஸ் (Tanjung Manis), தாரோ (Daro) மற்றும் சபா (Sabah): உட்பகுதி பிரிவில் உள்ள கெனிங்காவ் (Keningau), தம்புனான் (Tambunan); மேற்குக்கரை பிரிவில் உள்ள பாப்பார் (Papar), பெனாம்பாங் (Penampang) மற்றும் சண்டாக்கான் பிரிவில் உள்ள கினபாத்தங்கான் (Kinabatangan) என்பன அடங்கும்.
குறிப்பிட்ட பகுதிகளில் மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாக வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியில் செல்லும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



















