உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறிய அணிகள்

உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறின.

இந்தச் சுற்றில் வெற்றிபெற்ற அணிகள் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் முன்னேறின. 16 அணிகள் பங்கேற்ற ரவுண்ட் ஆஃப் சுற்று நிறைவடைந்த நிலையில் இந்த சுற்றில் வெற்றி பெற்ற 8 அணிகள் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன. இந்நிலையில் பிரான்ஸ், மொரோக்கோ, ஸ்பெய்ன், பெல்ஜியம், நார்வே, இங்கிலாந்து, அர்ஜெண்டினா, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தன.
காலிறுதிச் சுற்று போட்டிகள் அமெரிக்காவில் இன்று நள்ளிரவு தொடங்குகிறது.

மியாமி மைதானத்தில் 11ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நார்வே, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கான்சாஸ் சிட்டி மைதானத்தில் 12ஆம் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் அர்ஜெண்டினா, சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன. காலிறுதியில் வெற்றி பெறும் 4 அணிகள் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு முன்னேறும். அதன்பின் அரையிறுதியில் வெற்றிபெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடைசிகட்ட பரபரப்புக்குள் நுழைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here