லிங்கி தொகுதியில் இந்தியர்களின் அமோக ஆதரவு – பாகாத்தான் ஹராப்பானின் வெற்றிக்கு வழிவகுக்கும்- டத்தோஸ்ரீ அமீனுடின் நம்பிக்கை!

(க.கலை)

போர்ட்டிக்சன்,

எதிர்வரும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் லிங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாகாத்தான் ஹராப்பான் மாநிலத் தலைவரும் தற்காலிக மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அமீனுடின் ஹரூன், போர்ட்டிக்சன் கம்போங் செங்காங்கில் இந்திய வாக்காளர்களை நேரில் சந்தித்து தீவிர ஆதரவு திரட்டினார்.

          பிரச்சாரத்தின் போது பேசிய அவர், இனப் பாகுபாடின்றி B40 எளிய மக்கள் மற்றும் M40 நடுத்தர வருமானப் பிரிவினரின் வாழ்வாதாரம், கல்வி மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதே தமது நிர்வாகத்தின் முதன்மை நோக்கம் என உறுதியளித்தார்.

மேலும், லிங்கி வாழ் இந்தியச் சமுதாய மக்கள் பாகாத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு அளித்து வரும் பிளவுபடாத பேராதரவு தமக்கு மிகுந்த நெகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மாநிலத்தின் நீடித்த சமூக-பொருளாதார வளர்ச்சி, இன நல்லிணக்கம் மற்றும் அனைத்துத் தரப்பினருக்குமான நிலையான ஆட்சி தொடர, வாக்காளர்கள் அனைவரும் தங்களின் பொன்னான வாக்கினை பாகாத்தான் ஹராப்பான் (PH) கூட்டணிக்கு வழங்கி அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் அறைகூவல் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here