மாராங்கில் புயல்; 96 வீடுகள் சேதம்

மாராங்:

கடந்த புதன்கிழமை மாலை மாராங் மாவட்டத்தில் வீசிய புயலில் மொத்தம் 96 வீடுகள் சேதமடைந்துள்ளதாக திரெங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் விரைவில் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதை உறுதிசெய்ய மாநில அரசு உடனடி உதவிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது என்றார்.

“இந்தப் புயலில் மொத்தம் 96 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, அவை அனைத்தும் வெவ்வேறு நிலைகளில் சேதம் அடைந்தன. குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு விரைவாகத் திரும்புவதற்கு வசதியாக, நாங்கள் தன்னார்வலர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழுவின் உதவியுடன் துப்புரவு பணிகளை ஏற்பாடு செய்கிறோம் என்று அவர் சொன்னார்.

“மழை பெய்யும் போது, ​​வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடையாமல் இருக்க, கூரை பழுது பார்க்கும் பணியை இன்றே முடித்துவிடுவோம் என்று நம்புகிறோம்”என்று அவர் இன்று கம்போங் செபெராங் மராங்கில் புயலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைப் பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here