அசாமில் வெள்ள சூழல் மோசமாகவே நீடித்தது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பலி எண்ணிக்கை 98-ஐ எட்டியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 13-ஆகவும், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1.55 லட்சமாகவும் குறைந்துள்ளது. சாரைடியோ (Charaideo) மாவட்டத்தில் உள்ள மஹ்மோரா வருவாய் வட்டத்தில்தான் இந்த சமீபத்திய உயிரிழப்பு பதிவாகி இருப்பதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அறிக்கை தெரிவிக்கிறது.
























