சுற்றுலாத்துறையை குறைத்து மதிப்பிடமுடியாது

கோவிட் -19 தொற்றுநோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும், சுற்றுலாத்துறை நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பாகவே  இருக்கும்.

பொருளாதாரத்திற்கு மாற்றாக மாற்றுத் துறைகளுக்கு பிரயத்தனப்படலாம். ஆனால் அது வெற்றிதராது. கிட்டத்தட்ட இம்முயற்சி சாத்தியமற்றதும் கால விரயத்தை ஏற்படுத்துவதுமாக இருக்கும்  என்று பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர்.

உணவு, பானம், போக்குவரத்துத் துறைகள் உட்பட, மேநிலை, கீழ்நிலை ஆகியவற்றில் தொடர்புடைய பல்வேறு துணைத் தொழில்களுடன் இவை நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன..

சன்வே பல்கலைக்கழக வணிகப்பள்ளி பொருளாதாரத்துறை பேராசிரியர் டாக்டர் யே கிம் லெங் கூறுகையில், தற்போதைய சர்வதேச பயணத்தடையை கருத்தில் கொண்டு உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் தொழில்துறையாளர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிப்பது மிக முக்கியம் என்கிறார் அவர்.

இந்த கடினமான காலக்கட்டத்தில் இத்துறையை நிர்வகிக்க முடிந்தால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்கள்  மீண்டும் அனுமதிக்கப்பட்டவுடன் வருவாய் நிச்சயம் கூடும்.

இப்போதைக்கு, அரசாங்கம் உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும், இது மற்ற துறைகளுடன் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பதும் மிகப்பெரிய  காரணம்.

பொருளாதாரத்திற்கு சுற்றுலாத்துறை முக்கிய பங்களிப்பாக இருப்பதால் அதன் சாத்தியமான வருமானத்தைத் தொடர்ந்து மேம்படுத்த பாதிக்கப்படுவதும் சரிவதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்  என்று அவர் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை ஆண்டுதோறும் நாட்டின் பொருளாதாரத்திற்கு 15 விழுக்காடு பங்களிப்புச் செய்கிறது.  இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடாகும்.

கோவிட் தொற்றுநோய் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை கிட்டத்தட்ட சுழியத்திற்கு மாற்றியிருந்தாலும் தொழில்துறைக்கு நீண்டகால அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மக்கள் தொடர்ந்து பயணிக்கவும் இடங்களைப் பார்க்கவும் விரும்புகின்றவர்கள். ஆதாலால் சுற்றுலாத்துறை எவ்வகையிலும் பாதிப்படைந்துவிடக்கூடாது என்கிறார் சுயேட்சை பொருளாதார நிபுணரான பேராசிரியர் டாக்டர் ஹூ கே பிங், ஆதலால் சுற்றுலாவை நம்பியிருப்பது மிக அவசியம் என்கிறார் அவர். அதனால்  இத்துறையை மாற்றுவது மிகவும் கடினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here