மும்பை, பாலிவுட் திரையுலகின் முன்னணி பின்னணி பாடகர்களில் ஒருவர் சோனு நிகாம். நரம்பு அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு, மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
பொதுவாக ஆபரேஷன் தியேட்டர் என்றாலே பதற்றமும் பயமும் தொற்றிக்கொள்ளும். ஆனால், பாடகர் சோனு நிகாம் தனக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போதே, பாட்டுப் பாடி டாக்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.










