கோலாலம்பூர் உட்பட 6 மாநிலங்களில் மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

கோலாலம்பூர்:

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் மற்றும் ஆறு மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று மாலை 7.00 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வானிலை கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசிய மாநிலங்களில் நிலவும் என அது தெரிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கக்கூடிய மழை அல்லது மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் (20mm/hour) அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் அறிகுறிகள் தென்படும்போது இத்தகைய குறுகிய கால எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

இதன்போது திடீர் வெள்ளம், மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மின்னல் அபாயம் காரணமாக, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here