கோலாலம்பூர்:
கம்போங் செராஸ் பாருவில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு மறுசுழற்சி தொழிற்சாலையும் மூன்று வீடுகளும் முற்றிலும் சேதமடைந்தன.
இந்த விபத்தின் போது வானத்தை நோக்கிப் பெருமளவில் புகையும் தீப்பிழம்புகளும் எழும்பின.
சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 12:37 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் தெரிவித்தார்.
தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே, அதாவது 12:40 மணிக்குத் தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றடைந்தனர்.
அங்கு தீ பரவியதில் கட்டடப் பகுதிகளின் சுமார் 80 சதவீதம் கடுமையான சேதத்திற்கு உள்ளானது. தீயணைப்புப் படையினரின் விரைவான நடவடிக்கையால் அதிகாலை 1:24 மணியளவில் தீ முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் அசம்பாவிதங்களோ, உயிரிழப்புகளோ அல்லது எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.























