கோலாலம்பூர்:
பேராக், செரி இஸ்கந்தர் பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரத் திருட்டில் ஈடுபட்டு பிட்காயின் (Bitcoin) கிரிப்டோகரன்சி சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இரு உள்ளூர் ஆண்களைப் பேரக் தெங்கா மாவட்டக் காவல் தலைமையகத்தினர் இன்று அதிரடியாகக் கைது செய்தனர்.
பேராக் தெங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்தின் ‘சீல்’ பொறியாளர் குழுவினருடன் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையின் போது இந்த சட்டவிரோதக் கும்பல் கையும் களவுமாகச் சிக்கியது.
“ஸ்ரீ இஸ்கந்தர் சுற்றியுள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில், நேரடியாக மின்சார இணைப்புகளைத் திருடிப் பிட்காயின் சுரங்க நடவடிக்கைகளைச் செய்து வந்த வணிகக் கட்டிடம் அடையாளம் காணப்பட்டது. அங்கிருந்து 30 பிட்காயின் எந்திரங்கள், ஒரு ரவுட்டர் , ஒரு டெஸ்க்டாப் ஸ்விட்ச் மற்றும் ஒரு சுருள் மின்சாரக் கம்பிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பேராக் தெங்கா மாவட்டக் காவல் துறைத் தலைவர், சூப்ரெண்டன்ட் ஹஃபிசுல் ஹெல்மி ஹம்சா கூறினாள்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு உள்ளூர்வாசிகளும் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இ வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 427 மற்றும் 1990-ஆம் ஆண்டு மின்சார விநியோகச் சட்டத்தின் பிரிவு 37(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
















