பூமிக்கு அடியில் பெருங்கடலா ? ஆராய்ச்சியில் புதிய தகவல்

விண்வெளியில் இருந்து வந்த பனிக்கட்டி வால்மீன்களால் தான், பூமி கிரக்தில் நீர் ஆதாரம் உருவாகியது என்று தான் இதுநாள் வரை பெரும்பாலான புவியியலாளர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பூமியின் நீர் ஆதாரம் சார்ந்த அறிய கண்டுப்பிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

பூமி கிரகத்தின் மேல்பரப்பு மற்றும் உட்கருவம் ஆகிய இரண்டிற்கும் மத்தியில் பரந்த அளவிலான நிலத்தடி கடல்பகுதி இருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர். அதாவது பூமிக்கு அடியில், பூமியின் மேற்ப்பரப்பில் இருப்பதை விட 3 மடங்கு அதிக அளவிலான கடல் நீர் இருப்பு உள்ளதாம்.

மேலும் கண்டுப்பிடிக்கப்பட்ட கடல் நீர் ஆனது ரிங்வுடைட் என்ற கணிமத்தின் உள்ளே சிக்கி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் பெருங்கடலை விட 6 மடங்கு பெரிய மிகப்பெரிய கடல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள போட்ஸ்வானா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு பகுதியில் நடந்த அகழ்வாய்வில் வைரமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வைரமானது இதுவரை கிடைத்த வைரங்களிலேயே முற்றிலும் வேறுபட்டிருந்தமை அவதானிக்கப்பட்ட நிலையில் அதனை இயற்பியல் விஞ்ஞானிகளிடம் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒப்படைத்துள்ளனர்.

வித்தியாசமான அமைப்பைக் கொண்ட அந்த வைரத்தை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்த நிலையில் அதில் ‘ரிங்வூட்டி’ என்ற ஒரு வகை கனிமங்களும், கடல் நீரின் படிமங்களும் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த ரிங்வூட்டி கனிமங்கள் பூமிக்கு அடியில் சுமார் 660 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள இடத்தில் இருப்பவை என்பதால் குறித்த வைரத்தை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

அதாவது, பூமியின் மேல் அடுக்குக்கும், கடைசி அடுக்குக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும் இடமானது வெற்றிடம் என்றே விஞ்ஞானிகள் கருதி வந்த நிலையிலேயே மீட்கப்பட்ட வைரத்தில் கடல் நீர் இருந்ததை பார்த்தே விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் பூமிக்கு அடியில் ஒரு பெரிய கடல் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

எனினும் இந்த ஆராய்ச்சி ஒரு அறிவியல் கூற்றாகவே உள்ளதாகவும், இது தொடர்பில் மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here