மண்ணின் மைந்தன் ஜெகசீலனுக்கு மக்கள் பெரும் ஆதரவு!

(மாலினி |மலாக்கா)

மலாக்கா அரசியலில் புதிய மாற்றத்தையும் மக்கள் நலனைக் காப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு, காடேக் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளராகக் களம் கண்டுள்ளார் கே.ஜெகசீலன்.  மண்ணின் மைந்தன் என்ற அடையாளத்துடன் தனது தேர்தல் பயணத்தைத் தொடங்கியுள்ள அவர், இத்தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் உறுதிகொண்டுள்ளார்.

இம்மண்ணில் பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில், காடேக் தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும் அவர்களின் வாழ்வாதாரச் சவால்களையும் தான் மிக அருகில் இருந்து உணர்ந்திருப்பதாக ஜெகசீலன் குறிப்பிடுகிறார்.

கடந்த காலங்களில் மலக்கா மாநில இந்திய சங்கத் தலைவராகப் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு, மக்களுடன் மேலும் நெருங்கிப் பழகி அவர்களின் குரலாக ஒலிப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தேர்தல் போட்டியும் சவால்கள் நிறைந்ததுதான் என்றாலும், மக்களின் நல்மதிப்பையும் அவர்களின் ஆதரவையும் முழுமையாக நம்பி இந்தத் தேர்தல் களத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார் ஜெகசீலன்.

காடேக் தொகுதியின் விடியலுக்காகவும், மக்களின் உண்மையான முன்னேற்றத்திற்காகவும் உழைக்கத் தயாராகியுள்ள இந்த மண்ணின் மைந்தனின் வெற்றிப் பயணத்திற்கு பலரும் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here