அந்தோணி லோக்கின் பதவி விலகல் மாமன்னரின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறதா? – டோக் மாட் கடும் விமர்சனம்!

பெட்டாலிங் ஜெயா, 

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு வீட்டுக்காவல் அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோணி லோக் விலகியிருப்பது, மாமன்னரின் அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்ட மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் செயலாகத் தோன்றுவதாகப் பாரிசான் நேஷனல் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

டோக் மாட் என அழைக்கப்படும் வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான், மாமன்னருக்கு மன்னிப்பு வழங்குவதற்கான அதிகாரம் கூட்டரசு அரசியலமைப்பில் தெளிவாக வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அந்தோணி லோக் தனது பதவி விலகலைக் கொள்கை அடிப்படையிலான முடிவு எனக் கூறினாலும், அது நஜிப்பிற்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்புக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கப்படலாம் என்றும் அவர் விமர்சித்தார்.

மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது ஜாசினில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாமன்னரின் முடிவைக் காரணம் காட்டி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவது பொருத்தமான நடவடிக்கையல்ல எனத் தெரிவித்தார். இதனிடையே, அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி நேற்று அந்தோணி லோக்கை கொள்கைப் பிடிப்புள்ள தலைவர் எனப் பாராட்டியிருந்த நிலையில், முகமட் ஹசானின் கருத்து அதற்கு மாறுபட்டதாக அமைந்துள்ளது.

மறுபுறம், நஜிப்பிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடனான அரச மன்னிப்பை எதிர்க்கும் நடவடிக்கைகள், மாமன்னரின் அரசியலமைப்பு அதிகாரத்திற்குச் சவால் விடுப்பதாகக் கருதப்படலாம் என அஹ்மட் ஸாஹிட் ஹமிடியும் எச்சரித்துள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்பின் 42ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மன்னிப்பு அதிகாரத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். SRC International வழக்கில் தண்டனை பெற்ற நஜிப், ஐந்து கோடி ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தியதைத் தொடர்ந்து, 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை எஞ்சியுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here