பிரதமர் முஹிடின் யாசின் செரிமான கோளாறுக்கான தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்

பெட்டாலிங் ஜெயா: பிரதமர் முஹிடின் யாசின் தற்போது  செரிமான கோளாறுக்கான தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், முஹிடின் மருத்துவமனையில் தங்கியிருப்பார். அங்கு அவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை அளிக்கப்படுகின்றன என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. முஹிடின் “அடுத்த இரண்டு நாட்களில்” இல்லம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை, வயிற்றுப்போக்கு காரணமாக முஹிடின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. முஹிடினுக்கு 2018 ஆம் ஆண்டில் நிலை 1 கணைய புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. புற்றுநோயை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். மேலும் கீமோதெரபியையும் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு, புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெறுவதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று முஹிடின் சுய தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதாக ஒரு அறிக்கையை மறுத்தபோது இந்த நோய் மீண்டும் வந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அவரது அலுவலகம் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here