புலி தாக்கிய பின்னர் காணாமல்போனதாக தேடப்பட்ட பூர்வக் குடி ஆடவரின் சடலம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது

கடந்த செவ்வாய்கிழமை முதல் காணாமல் போன பூர்வக் குடி ஆடவரின் உடல், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோலா சுங்கை துங்குல் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட ஹலிம் அசின், 27, என்பவர் நேற்று மாலை 5.10 மணியளவில் நீர்வழிகளைப் பயன்படுத்திய தேடல் மற்றும் மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டார் என்று, குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் அரை நிர்வாணமாகவும், சட்டை மட்டுமே அணிந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் இருட்டாக இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டார் இதன்காரணமாக, அவ்வேளையில் உடலை அகற்றுவது மீட்புக் குழுவிற்கு மிகவும் ஆபத்தானது. எனவே மீட்புக் குழு இன்று காலை உடலை அகற்ற முடிவு செய்து, இன்று மதியம் 12.30 மணியளவில் சுங்கை ஏரிங் 5 கரையை அடைந்தது,” என்று அவர் கூறினார்.

குவா மூசாங், கம்போங் ஆரிங் 5 க்கு அருகிலுள்ள சுங்கை ஆரிங்கில் மீன்பிடிக்கச் சென்றபோது, புலி தாக்கியதில் குறித்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆடவர் காணாமல் போனார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here