அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஒரு கட்டடத்தில் இருந்து பெறப்படும் கழிவு நீரை மறுசுழற்சி செய்வதன் மூலமாக பீர் தயாரித்துள்ளது என்பது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. Epic Cleantec என்ற நிறுவனம் 40 மாடி கட்டடம் ஒன்றில் உள்ள ஷவர், சின்க் மற்றும் வாஷிங் மெஷின் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவு நீரை பீராக மாற்றியுள்ளது. உலக அளவில் கிட்டத்தட்ட 14 சதவீத குடிநீரை பிற தேவைகளுக்காக பயன்படுத்தும் மக்கள் அதனை மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தாமல் வீணாக்கி வருகின்றனர். இதனை மாற்றும் முயற்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
Devil’s Canyon Brewing Co நிறுவனத்துடன் இணைந்து ஆன்சைட் கிரே வாட்டர் ரீயூஸ் சிஸ்டத்தை பயன்படுத்தி எபிக் கிளீன்டெக் நிறுவனம் பீர் தயாரித்துள்ளது. இந்த ஆன்சைட் கிரே வாட்டர் ரீயூஸ் சிஸ்டமானது குளிக்க மற்றும் துணிகளை துவைக்க பயன்படுத்தும் நீர், மொட்டை மாடியில் வீணாகும் மழை நீர் ஆகியவற்றை சேகரித்து அதனை வடிகட்டி, கிருமிநீக்கம் செய்ததற்கு பிறகு பீராக மாற்றுகிறது.
தற்போது சான் ஃபிரான்சிஸ்கோவில் பின்பற்றப்படும் விதிகளின்படி, மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பானங்களை சந்தைப்படுத்த முடியாது என்றாலும் கூட இந்த பீரானது ஒரு மிகப்பெரிய முன்னோடியாக மாறி உள்ளது.
கழிப்பறையில் குடிநீர் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பது பற்றியும் ஆரான் டார்டாகோவ்ஸ்கை வாதிட்டார். இந்த Fifteen Fifty சிஸ்டம் மூலமாக ஒரு நாளைக்கு 28 ஆயிரம் லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்ய முடியும். அதுவே ஒரு வருடத்திற்கு 94,63,529 லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்யலாம், அதாவது இது 1.9 கோடி பாட்டில் தண்ணீருக்கு சமம் ஆகும்.




















