எம்ஏசிசியிடம் வாக்குமூலம் வழங்கிய பிறகு விடுவிக்கப்பட்ட பெர்லிஸ் MB

புத்ராஜெயா: பெர்லிஸ் மந்திரி பெசார் முகமட் சுக்ரி ராம்லி, தனது வாக்குமூலத்தை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) தலைமையகத்தில் அளித்த பின்னர் விடுவிக்கப்பட்டார். தான் தடுப்புக்காவல் செய்யப்படவில்லை என்றும் வாக்குமூலம் வழங்கிய பிறகு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது என்று முகமட் சுக்ரி செவ்வாயன்று (ஏப்ரல் 30) ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.

முன்னதாக, MACC தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி, முகமட் சுக்ரி விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். முகமட் சுக்ரியின் மகன் மீதான குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி விசாரித்து வருவதாக அவர் கூறினார். தன் மீது கூறப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுகளுக்கு தனது அதிகாரிகளும் பதிலளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here