12 ஆண்டுகளில் மின்-சிகிரெட் புகைப்போரின் எண்ணிக்கை 600 விழுக்காடு அதிகரிப்பு; வெளியான அதிர்ச்சி தகவல்

கோலாலம்பூர்:

2023 ஆம் ஆண்டின் உலகளாவிய வயது வந்தோர் புகையிலை தயாரிப்பு பயனீட்டு கணக்கெடுப்பின்படி, கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் மின்-சிகிரெட் புகைப்போரின் எண்ணிக்கை 600 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இதில் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே மின்-சிகிரெட்டின் பயன்பாடு 2011 இல் 1.1 விழுக்காடாக இருந்தது .2023 இல் இந்த எண்ணிக்கை 8.6 விழுக்காடாக அதிகரித்துள்ளதை அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

“அதே நேரம் மலேசியா முழுவதும் புகையிலை தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துவோர் 2011 இல் 0.8 விழுக்காட்டிலிருந்து 5.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

இருப்பினும், 2011 முதல் 2023 வரையான காலப்பகுதியில் வீடுகள், பணியிடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகியவற்றில் புகை பிடித்தல் கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது ஓரளவு ஆறுதலடையச் செய்துள்ளது.

இந்நிலையில் புகையிலை பயன்பாடு தொடர்பான சவால்களைச் சமாளிக்க அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், முக்கியமாக சிகிரெட்டின் விலை மற்றும் மின்-சிகிரெட்டின் அதிகரித்த பயன்பாடு என்பவற்றை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here