அந்நியத் தொழிலாளர்களுக்கு இபிஎப் சந்தா செலுத்துவதை கட்டாயமாக்கும் வகையில் 1999ஆம் ஆண்டு இபிஎப் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இபிஎப் சட்டதிருத்தம் தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் வியாழக்கிழமை முடிவடைந்தற்குள் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சுய விருப்பத்தின் பேரில் தான் அந்நியத் தொழிலாளர்களுக்கு இபிஎப் சந்தா செலுத்தப்படுகிறது என்று இபிஎப் தலைமை நிர்வாக அதிகாரி அகமட் ஜூல்கர்ணய்ன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்நியத் தொழிலாளர்களுக்கு இபிஎப் சந்தா செலுத்துவதை கட்டாயமாக்க வேண்டுமென்றால் சட்டத்தில் அவசியம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொடக்க மதிப்பீடு அடிப்படைகளில் பார்த்தால் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான அந்நியத் தொழிலாளர்கள் இபிஎப் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.






















