ஸம்ரி வினோத் மீது அவதூறு வழக்கு மலேசிய இந்து சங்கம் தொடுக்க வேண்டும் ம.இ.கா. வலியுறுத்தல்

•(பி.ஆர். ராஜன்)

கோலாலம்பூர்:

இந்து சமயத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்திவரும் ஸம்ரி வினோத் மீது அவதூறு வழக்குத் தொடுப்பதற்கு மலேசிய இந்து சங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேசமயம் இந்து சமயத்தை அந்நபர் தொடர்ந்து இழிவுபடுத்தக் கூடாது என்பதற்கு இடைக்காலத் தடைஉத்தரவு ஒன்றை  மலேசிய இந்து சங்கம் பெறவேண்டும் என்று  ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

ஸம்ரி வினோத் அவர் சார்ந்திருக்கும் சமயத்தை மட்டும் பேசட்டும், பரப்பட்டும். இந்து சமயம், நம்பிக்கை ஆகியவற்றைப் பேசும் அதிகாரம் இல்லை.  இதுவரை அவர்பேசியது போதும். இனியும் இந்து சமயத்தையும் இந்துக்களின் நம்பிக்கையையும் அவர் இழிவுபடுத்திப் பேசக்கூடாது.

இதற்கு அவதூறு வழக்கும்  இடைக்காலத் தடைஉத்தரவுமே சரியான தீர்வாக அமையும் என்று அவர்குறிப்பிட்டார். ம.இ.கா. வழக்கறிஞர்கள் குழு மலேசியஇந்து சங்கத்திற்குத் தேவையான சட்ட உதவிகளைவழங்கும்.

மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் தங்ககணேசனும் அவர் தம் நிர்வாகத்தினரும் இவ்விவகாரத்தில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ம.இ.கா.  இந்தியசமுதாயத்தின் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது என்றார்.

ம.இ.கா.வில் அனைத்து சமயத்தினரும் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்கள் அனைவரது நலன்களைக்காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ம.இ.கா.வுக்கு உண்டு. அவ்வகையில் இந்துசமயத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தியும்  நையாண்டி செய்தும் வரும்  ஸம்ரி வினோத்போன்ற பிரச்சாரகர்களுக்கு எதிராக  உரிய நடவடிக்கைஎடுக்கப்படுவதை ம.இ.கா. உறுதி செய்யும்.

அவ்வகையில்  மலேசிய இந்துக்களின் நலன்களைக்காக்கும்  மலேசிய இந்து சங்கத்திற்கு  ம.இ.கா. பக்கபலமாக இருந்து தேவையான உதவிகளை வழங்கும்ம.இ.கா. வழக்கறிஞர் குழுவினர் இதற்குத் தயாராகஇருக்கின்றனர்.

இந்து சமயம் இழிவுபடுத்தப்படுவதை ம.இ.கா.  இனியும் சகித்துக் கொள்ளாது. வேடிக்கையும் பார்த்துக்கொண்டிருக்காது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் திட்டவட்டமாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here