கோலாலம்பூர்:
ஜோகூர் உலு திராம் காவல் நிலையத்தில் இரண்டு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடைமுறை) சட்டத்தின்கீழ் (சொஸ்மா) ஐவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அரச மலேசிய காவற்படையின் தலைவர் ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
மே 24ஆம் தேதியுடன் தடுப்புக் காவல் முடிவடைந்ததால் ஐவரும் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டனர் என்றும், இவ்வழக்கு கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302, துப்பாக்கிச் சட்டத்தின் (கூடுதல் அபராதம்) பிரிவு 8 ஆகிய இரு குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரணை நடந்து வருவதாகவும் அவர் சொன்னார்.
மேலும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 47 சாட்சியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார் .





















