சரவாக்கில் மே 15 முதல் 247 தொலைத்தொடர்பு கோபுரங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் தகவல் தொடர்பு அமைச்சர்

கூச்சிங்:

ல்டி-ஆபரேட்டர் கோர் நெட்வொர்க் (MOCN) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொத்தம் 247 சரவாக் மல்டிமீடியா ஆணைய கிராமப்புற தொலைத்தொடர்பு கோபுரங்கள் மே 15 முதல் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன.

அனைத்து கோபுரங்களும் CelcomDigi, Maxis, U Mobile மற்றும் YTL ஆகிய சேவை வழங்குநரை உள்ளடக்கியதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃ பாஹ்மி ஃபட்ஸில் தெரிவித்தார்.

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக கழகம் (MCMC), நிதி அமைச்சகம் (MOF) மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பல கட்ட ஒதுக்கீடுகள் மூலம் சரவாக்கில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள 600 தொலைத்தொடர்பு கோபுரங்களின் ஒரு பகுதியாக குறித்த 247 கோபுரங்களும் இருப்பதாக அவர் கூறினார்.

“அவற்றுக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதால், மீதமுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்கள் விரைவில் சேவைகளை வழங்கும் என்றும், இந்த வசதிகளை சரவாக் மக்கள் பயன்படுத்த முடியும்,” என்றும் அவர் நேற்று நடந்த ஓர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here