கோலாலம்பூர்:
வரும் ஜூலை 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சுங்கை பாக்காப் மாநில இடைத்தேர்தலின் போது,போலிச் செய்திகள் பரவுவதைக் கண்காணிக்கவும் தடுக்கவும் ஒரு சிறப்புக் குழுவை அரசு அமைக்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் பாஃஹ்மி பஃட்சில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் பொறுப்பற்ற கட்சிகளால் பரப்பப்படும் பல்வேறு வகையான போலிச் செய்திகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஒன்றாக தமது அமைச்சகம் அனைத்து சமூக ஊடக தளங்களையும் கண்காணித்து வருவதாக அவர் சொன்னார்.




















