பகாங்கில் 4 ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை விட அதிகமாக உள்ளது

குவாந்தான், மார்ச் 2 :

இன்று காலை 11.15 நிலவரப்படி, பகாங்கில் உள்ள நான்கு ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை விட அதிகமாக பதிவாகி வருகின்றன. ஜெராண்துட், பேரா, மாரான் மற்றும் குவாந்தன் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ஆறு இந்நிலையில் உள்ளது.

நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் (JPS) இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, கம்போங் மெர்திங்கில் உள்ள சுங்கை தேம்பெலிங், ஜெராண்துட் மற்றும் பேராவின் பாடாங் குடாங் பாலத்தில் உள்ள சுங்கை செர்ட்டிங் போன்ற ஆறுகளுடன் ஃபெல்டா ஜெங்கா திட்டத்தில் சுங்கை ஜெம்போல், குவாந்தானின் பாசீர் கெமுடியில் உள்ள மாரான் மற்றும் சுங்கை குவாந்தான் ஆகியவற்றின் நீர்மாட்டம் எச்சரிக்கை நிலைக்கு மேலே உள்ளன.

இதற்கிடையில், மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகாங் கடற்பகுதியில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று மற்றும் 3.5 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here