போர்ட்டிக்சன்:
Operation Tapis என கூறப்படும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், நேற்று நடந்த சோதனையில் உள்ளூர் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.
22 முதல் 44 வயதுடைய சந்தேகநபர்கள் அனைவரும் மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முஹமட் தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து 464.50 கிராம் ஹெரோயின், 15.35 கிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் 23.3 கிராம் கஞ்சா ஆகியவற்றையும் கைப்பற்றியதாகவும், இதன் மதிப்பு RM14,029 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட தாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அபாயகரமான மருந்துகள் சட்டம் 1952 இன் 39பி, 39ஏ(1), 12(3) மற்றும் 15(1)(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேக நபர்கள் அனைவரும் ஜூலை 15ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஐடி ஷாம் மேலும் கூறினார்.





















