மஇகா கெடா மாநில புதிய தலைவர் எஸ்.கே.சுரேஸ்

(கு.அன்பரசன்)

சுங்கைபட்டாணி ஆக.14 – மஇகா நிர்மாணிக்க இருக்கும் புதிய இரட்டை கோபுர கட்டடத்தின் வழி கிடைக்கப்பெறும் வருமானம் மஇகாவினருக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் உயரிய அந்தஸ்தையும் கௌரவத்தையும் தரவல்லதாக இருக்கும்.

அது மட்டும் அன்றி வரும் காலத்தில் சொந்தக் காலில் நின்று அரசியல் செய்யக்கூடிய பொருளாதார வலிமையை பெற்றிருக்கும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன் கூறினார்.

இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நாம் மானத்தோடு வாழும் காலமாக அது அமையப் பெறும் என பலத்த கரவொலிக்ககடையே அவர் சூளுரைத்தார்.

இங்குள்ள பிரபல “பூரஸ்ட்” ஹோட்டலில் கெடா மாநில மஇகா வீன் 78ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உரையாற்றினார்.

அப்போது கெடா மாநில மஇகாவை இனி தலைமை ஏற்று நடத்தப்போவது சுரேஸ் சுப்பிரமணியம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்க மண்டபம் பேராளர்களின் பலத்த கரவொலியால் அதிர்ந்தது.

தொடர்ந்து கெடா மாநில மஇகா புதிய தலைவர் சரேஸை அறிமுகம் செய்து வைத்தார்.

மஇகா உறுப்பினர்களை பாதுகாக்கும் நெஞ்சுரம் சக்தி மஇகாவிற்கு உள்ளது.

இந்தச் சமுதாயம் ஏமாரந்த சமுதாயம்.நம்மை விட்டால் இவர்களுக்கு வேறு யாரும் இல்லை.

நீங்கள் நன்கு சிந்தித்து ஒன்றுபட்ட சக்தியாக வேலை செய்தால் இந்த கெடா மாநிலத்தில் நாம் இழந்த சீட்டை மீண்டும் பெற முடியும் என்பதோடு நமது இனத்தை உன்னதமான இடத்தில் வைப்பதற்கு வழி வகுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

தலைமைத்துவம் வேலை செய்தால் மட்டும் சாத்தியப்படாது,அடிப்படை உறுப்பினர்கள், கிளைத் தலைவர்கள், தொகுதிகள்,மாநிலம் அனைத்தையும் வலுப்படுத்தினால் மட்டுமே இழந்தவற்றை நம்மால் மீட்டெடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

மஇகா இந்தியர்களுக்கானது. நமது இனத்தைப் பற்றி தான் நாம் பேச முடியும்; போராட முடியும் என்ற அவர் தேசியத் தலைவராக தமக்கு இதுதான் கடைசி தவணை என்றார்.

அதற்கு மேல் கட்சியை வழி நடத்தப் போவது தனது தம்பி சரவணன் (டத்தோஸ்ரீ) தான் என விநாயகரே வரங்கொடுத்திருக்கிறார் என்றார் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here