கோலாலம்பூர்:
பிரதமராக தாம் பதவி வகித்த காலத்தில் சில அம்னோ தலைவர்கள் தம்மிடம் இருந்து விலகி இருந்தது மிகப்பெரிய ஏமாற்றம் தந்ததை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஒப்புக்கொண்டார்.
அப்போது நான் கட்சியின் தேசிய உதவி தலைவராக இருந்தேன். நாட்டின் 9 ஆவது பிரதமராக நான் எதிர் பார்த்த கட்சி ஆதரவு எனக்கு கிடைக்கவில்லை. கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடியோடு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.
டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நிர்வாகத்தில் நான் மூத்த அமைச்சராக நியமனம் செய்யப்பட்டபோது ஏற்பட்ட பிரச்னைகள், நெருக்கடிகள் இன்றளவும் தொடர்கின்றன என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தமது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நடத்திய Podcast Keluar Sekejap நிகழ்ச்சியில் அவர் தமது மனவோட்டங்களை பகிர்ந்துகொண்டார்.







