வனப்பகுதியில் காணாமல் போன மாற்றுத்திறனாளி ஒருவர் 3 நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்பு

கோலக்கிராய்:

டந்த செவ்வாய்க்கிழமை, லதா புங்கில், சுங்கை பாஸ் நில மறுவாழ்வுத் திட்டத்தின் வனப் பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஊனமுற்ற நபர் ஒருவர் மூன்று நாட்களுக்குப் பின், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் அசார் அப்துல் ரஷீத், 50, என்பவர் புக்கிட் செங்காலில் உள்ள பாமாயில் தோட்டத்தில் இரவு 8.14 மணியளவில் உள்ளூர்வாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டார் என்று, கோலக்கிராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் நிக் அமாட் அஃப்ஷாம் நிக் பா கூறினார்.

பாதிக்கப்பட்டவர் ஆடையின்றிக் காணப்பட்டதாகவும், இரண்டு நாட்களாக உணவு உண்ணாமல் இருந்ததால் பலவீனமாகவும் பசியுடனும் இருந்தார் என்று அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவருக்கு எந்தக் காயமுமில்லை, அவர் மீட்புக் குழு வரும் வரை காத்திருந்த அவருக்கு குடியிருப்பாளர்களால் உடை மற்றும் உணவு வழங்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here