பேராக், செலாமா, லாடாங் மலாயாவில் குட்டி என்ற நாயை அம்பு எய்து கொன்றதாக 44 வயது ஆடவர் மீது தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் டிசம்பர் 23 ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்டது.
நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி இருக்கும் அந்நபர் அதே நாளில் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக பேராக் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டிசிபி டத்தோ ஸுல்காவ்ஃலி சரியாட் Zulkafli Sariaat கூறினார்.
இது போன்ற கொடூர மிருக வதை சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என்று அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.
குட்டியை அம்பு எய்து கொன்றார் என்ற புகார் கிடைக்கப்பெற்றதும் போலீஸ் டிசம்பர் 22 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். அந்த ஆசாமியிடமிருந்து ஒரு வில்லும் 5 அம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.





















